வேண்டுதல் வேண்டா மை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில் லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வேண்டுதல் வேண்டா மை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டா மையும்) இன் மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)
மணக்குடவர் உரை:
இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டா மையிலான்" என்று பெயரிட்டார்.
வேண்டுதல் வேண்டா மை இலான் அடி சேர்ந்தார்க்கு - விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு; யாண்டும் இடும்பை இல-எங்கும் எக்காலத்தும் துன்ப மில் லை. விருப்பு வெறுப்பினாலேயே துன்பங்கள் வருவதனாலும், விருப்பு வெறுப்பில்லாத இறைவனை யடைந்தவரும் விருப்பு வெறுப்பற்றவராயிருப்பராதலாலும், இறைவன் இன்ப வடிவினனாகவும் எல்லாம் வல்லவனாகவுமிருப்பதனாலும், அவனடியடைந்தார்க்கு எங்கும் என்றும் எவ்வகைத் துன்பமும் இல் லையென்பது.
க லைஞர் உரை:

சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல் லை.
Translation:
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain Shall not, through every time, of any woes complain.
Explanation:
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.
Transliteration:
Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku Yaantum Itumpai Ila