இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar
Definition):
கடவுளின் உண் மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியா மையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில் லை. சாலமன் பாப்பையா உரை:
பரிமேலழகர் உரை (Parimelazhagar
Definition):
இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை
என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ்
புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம் மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன் மைத்து என ஒருவராலும் கூறப்படா மையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும்
கூறினார். இறை மைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை
முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்)
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ்
சேரா; த லைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
தேவநேயப் பாவாணர் உரை:
இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இரு வினையும்
இல்லாதனவாகும். வழிதெரியாத இருள் போலிருத்தலின் அறியா மையை இருளென்றும், நல்வினையும் பிறவிக்கேதுவாமென்பது கொண்முடிபு (சித்தாந்தம்)
ஆதலின் இருவினையுஞ் சேராவென்றும் கூறினார். மக்கள் எத்துணைப் பெரியோராயிருப்பினும்
அவரின் அறிவாற்றலுங் காலமுங் குறுகிய வரையறைப்பட்டிருப்பதனாலும், அவரை மகிழ்விக்கக் கூறும் புகழுரைகளெல்லாம் உயர்வுநவிற்சியும்
இன் மைநவிற்சியுமேயாதலாலும், எல்லாவாற்றலும் என்றும் நிறைந்திருக்கும் இறைவன் புகழே
பொருளுள்ள புகழ் எனப்பட்டது. புரிதல் - விரும்பிச் சொல்லுதல். இறைவன் - எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் - தங்குதல். நல்வினை பிறவிக்கேதுவாவது கடவுள் வழுத்தொடு கூடாத
போதும் தீவினையொடு கலந்த விடத்துமாம்.
க லைஞர் உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற
விரும்புகிறவர்கள், நன் மை தீ மைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய் மைப் புகழையே விரும்புபவரிடம் அறியா மை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும்
சேருவதில் லை.
Translation:
The men, who on the
'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds
done ill or well.
Explanation:
The two-fold deeds that
spring from darkness shall not adhere to those who delight in the true praise
of God.
Transliteration:
Irulser Iruvinaiyum
Seraa Iraivan Porulser Pukazhpurindhaar Maattu